திமுக உடன் விஜயகாந்த் கூட்டணி?: கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

Share this :
No comments


வருகிற சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவித்தார். இதனால் விருப்பமனு அளித்தவர்கள், தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் விருப்பமனு அளித்து பணம் கட்டியவர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டு தேமுதிக நிர்வாகிகளை அனுகினர். பணத்தை திருப்பி கேட்கும் நிர்வாகிகளிடம் விஜயகாந்தும், தலைமை கழக நிர்வாகிகளும் போனில் தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது.

போனில் தொடர்பு கொண்டு பேசும் விஜயகாந்த் திமுக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுகவை கழட்டி விட்டு வேறு ஏதாவது கூட்டணியை அமைத்து அங்கு கிங் ஆக இருக்கலாம் என நினைத்த விஜயகாந்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பாஜக, மக்கள் நல கூட்டணி இரண்டுமே தற்போது எங்கள் கூட்டணியை ஏற்று விஜயகாந்த் வந்தால் வரட்டும் என்கிறார்கள். இதனால் விஜயகாந்த் திரும்பவும் திமுக பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் திமுக கூட்டணியில் சேரலாம என நிர்வாகிகள், தொண்டர்களை தொடர்பு கொண்டு விஜயகாந்த் கருத்து கேட்டு வருவதாக கட்சியினர் பேசுகின்றனர். இதனால் விஜயகாந்த் திமுக கூட்டணி ஜொரம் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது.

No comments :

Post a Comment