அம்மாவிற்காக கோவை சென்ற ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்காத தொண்டர்கள்

Share this :
No comments


தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக் குறைவால் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (83). பழனியம்மாளுக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தார்.

சமீபகாலமாக கட்சியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டதை அடுத்து, விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கு கூட ஆள் இல்லை. இதனால், தனது தாயாருடன் உறவினர்களின் காரில் ஏறிப் புறப்பட்டு சென்றார்.

பின்னர், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பழனியம்மாள் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் பன்னீர் செல்வம் தனது தாயார் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். பின்னர் நேற்று இரவு 11.50 மணி அளவில் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

No comments :

Post a Comment