விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த ராகுல் காந்தி: வரும்... ஆனா வராது...

Share this :
No comments


வருகிற சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் எனவும், இந்த கூட்டணி அடுத்து வரும் லோக்சபா தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என விஜயகாந்திடம் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலை தனித்து நின்று சந்திப்போம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். ஆனாலும் பாஜக, மக்கள் நல கூட்டணி கட்சிகள் விஜய்காந்தை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் திமுகவால் ஒரு கட்டத்திற்கு மேல் கீழே இறங்கி வர முடியவில்லை.

தேமுதிகவின் தனித்து போட்டி அறிவிப்பு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜயகாந்த் கூட்டணி அமைக்க வருவார் என தகவல்கள் வெளிவந்தன. இதனையடுத்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விஜயகாந்திடம் கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

விஜயகாந்தை போனில் தொடர்புகொண்டு பேசிய ராகுல் காந்தி திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும், அந்த தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக நீடிக்க வேண்டும். பாஜக கழற்றிவிட்டதைப் போல நாங்கள் செய்யமாட்டோம் என ராகுல் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ராகுலிடமும் விஜய்காந்த் எந்த உறுதியான பதிலும் சொல்லவில்லையாம்.

No comments :

Post a Comment