பூஜை போட்ட அன்றே புஸ்வாணமான சிம்பு படம்
நேற்று காலை சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பூஜை. மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, வாலு விஜய் சந்தர் இயக்க, சிம்பு நடிக்கும் படம்.
தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்.
இந்த பூஜை போட்ட சில மணி நேரங்களிலேயே பிரச்சனை ஆரம்பமானது. தயாரிப்பாளர் மது, டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கை நாங்கள்தான் தயாரிக்கிறோம். விஷால் நடிக்கிறார் என்று அறிவித்தார். மது, தெலுங்கு டெம்பரின் இணை தயாரிப்பாளர். அவர் நாங்கள் என்று சொன்னது, தன்னையும் தெலுங்கு டெம்பரின் தயாரிப்பாளரான கணேஷையும்.
அப்படியானால் சிம்பு படத்தின் கதி...?
உட்கார்ந்து புதிய கதை பண்ணலாமா இல்லை தோதான ரீமேக் சிக்குமா என்று நாடியை தடவிக் கொண்டிருக்கிறnர்கள்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment