தேர்தல் அதிகாரியின் காரில் 4 வெடிகுண்டுகள்
தேர்தல் அதிகாரி செல்ல இருந்த காரில் வெடிகுண்டுகள் இருந்த சம்பவம், மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் மால்டா நகரில் பள்ளிக்கூட வளாகம் ஒரு கார் நின்றிருந்தது. அந்த கார் தேர்தல் பணியை கவனிக்க, அதிகாரி பயன்படுத்தும் வாகனமாகும். நாளை அங்கு தேர்தல் நடை பெற உள்ளது.
இந்நிலையில், அந்த காரின் ஒட்டுனர் காரில் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது அவரின் சீட்டின் கீழே ஒரு பாலித்தீன் பை இருந்தது. அதன் உள்ளே இருந்த பொருளைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். உடனே அருகிலிருந்தவர்கள் என்னவென்று விசாரித்துள்ளனர்.
அவர் கூறிய தகவலைக் கேட்ட அவர்கள், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் அவர்கள், அங்கு வந்து சோதனை செய்த போது, அந்த பாலித்தின் பையில் 4 வெடிகுண்டுகள் இருந்தது. அதைக் கைப்பற்றி அவர்கள் அங்கிருந்து கொண்டு சென்றனர்.
அதன்பின், போதிய பாதுகாப்பு இல்லாமல் வாகனங்களை ஓட்ட முடியாது என்று ஓட்டுனர்கள் கூறிவிட்டனர். எனவே, தேர்தல் அதிகாரி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment