விஜயகாந்த் போட்டியா? : உளுந்தூர்பேட்டை தொகுதியை பிடுங்கிய திமுக

Share this :
No comments


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட வாய்ப்பிருப்பதால், ஏற்கனவே மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அந்த தொகுதியை, திமுக தட்டிப் பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலை, மனித நேய மக்கள் கட்சி திமுகவுடன் சேர்ந்து சந்திக்கிறது. அந்த கட்சிக்கு உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம், நாகை, ஆம்பூர், தொண்டாமுத்தூர் ஐந்து தொகுதிகளை ஒதுக்கியது திமுக. இது திமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில், உளுந்தூர்பேட்டை என்பது திமுகவின் கோட்டை.

எனவே இதற்கு எதிராக, உளுந்தூர்பேட்டை திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டச் செயலாளரான பொன்முடிதான், இதற்கெல்லாம் காரணம் என்று கூறி, அவரின் உருவப் படத்தை தீ வைத்து எரித்தனர்.

இந்நிலையில் மக்கள் மனிதநேய கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், உளுந்தூர்பேட்டை தொகுதி மீண்டும் திமுகவிற்கு வழங்கப்பட்டு விட்டதாக அறிவித்துள்ளார்.

ஏனெனில், உளுந்தூர்பேட்டையில், விஜயகாந்த் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும், அவரை வீழ்த்த வேண்டுமானால், அங்கு வலிமையான திமுக வேட்பாளரை நிறுத்தினால் சரியாக இருக்கும் என்று ஜவாஹிருல்லாவிடம் கூறியுள்ளது திமுக. அதற்கும் அவரும் ஒத்துக்கொள்ளவே, தற்போது அந்த தொகுதி திமுக வசம் வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஜி.ஆர். வசந்தவேலுவை வேட்பாளரக அறிவித்துள்ளது திமுக. அவர் திருநாவலூர் ஒன்றிய செயலாளர் மற்றும் துணைச் சேர்மனாகவும் உள்ளார்.

No comments :

Post a Comment