அன்புமணிக்கு ஜெயலலிதா வைத்த ஆப்பு: கரை சேருவாரா அன்புமணி?

Share this :
No comments


பாமகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அன்புமணி ராமதாஸை எப்படியாவது இந்த சட்டசபை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்ற அன்புமணி இந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டும் என நினைக்கிறது அதிமுக தலைமை.

அதிமுக ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வருபவர்களில் ஒருவர் அன்புமணி ராமதாஸ். இவரை பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்க விட்டதால் தான் இவர் இப்படி பேசுகிறார் என கோபம் கொண்ட அதிமுக தலைமை இந்த முறை அன்புமணியை வீழ்த்தியேயாக வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தர்மபுரியில் உள்ள எந்த தொகுதியில் போட்டியிடாலும் அவரை தோற்கடிக்க திட்டமிட்ட ஜெயலலிதா, முதலில் தர்மபுரி தொகுதியில் அந்த தொகுதியில் செல்வாக்குமிக்க இளங்கோவனை வேட்பாளரை களமிறக்கினார்.

அன்புமணி தர்மபுரி தொகுதியில் களமிறங்காமால் பென்னாகரம் தொகுதியில் தான் களம் இறங்குவார் என உளவுத்துறை மூலம் தகவலை பெற்ற ஜெயலலிதா, வேப்பனஹள்ளி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.பி.முனுசாமியை பென்னாகரம் தொகுதியின் வேட்பாளராக மாற்றி அறிவித்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா எதிர்பார்த்தது போலவே தற்போது அன்புமணி பென்னாகரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது கே.பி.முனுசாமியும், அன்புமணியும் நேரடியாக மோதுவதால் அந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.

கே.பி.முனுசாமி கடந்த 2014 வரை அதிமுகவின் ஐவரணியில் இடம்பெற்றிருந்தவர். மேலும் முக்கியமான துறைகளின் அமைச்சராக இருந்தவர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி வெற்றி பெற இவர் தான் காரணம் என கூறப்பட்டதால் அவரது கட்சி பொறுப்புகளை பறித்தார். இந்நிலையில் அன்புமணியை வீழ்த்த கே.பி.முனுசாமியையே களம் இறக்கி விட்டுள்ளார் ஜெயலலிதா.

கே.பி.முனுசாமி அந்த தொகுதியில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவர் நிச்சயம் அன்புமணிக்கு நெருக்கடி கொடுப்பார் என கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் இந்த வியூகத்தில் இருந்து அன்புமணி தப்பித்து கரை சேருவார என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

No comments :

Post a Comment