விஜயகாந்த் இனிமேல் அதிகம் பேச மாட்டார் : பின்னணி என்ன?

Share this :
No comments


இனி, பிரச்சார கூட்டங்களிலும், பொது மேடைகளிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிகம் பேசமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார், எப்படி பேசுகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை வைத்தே அதிமுக போன்ற கட்சிகள் அவரை நேரம் கிடைக்கும் போதேல்லாம் வசை பாடியும், கிண்டலடித்தும் வருகின்றனர்.

சிங்கப்பூர் சென்று அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த பிறகு, அவரின் உடல்நிலை இன்னும் மோசமானது. அவருக்கு டிமென்சியா அம்னீசியா (மறதி நோய்) இருப்பதாகவும், இதனால்தான் அவர் பேசும்போது, ஒன்றுக் கொன்று தொடர்பில்லாமல் பேசுகிறார் என்றும் கூறப்பட்டது. மேலும், அவர் பேசுவது எதுவும் புரியவில்லை என்று குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய பிரேமலதா, அவருக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதாக கூறினார்.

இதனால்தான் அவர் தன்னிலை மறந்து காணப்படுகிறார். ஒன்றுக்கொன்று தொடர்பின்றி ஏதோதோ பேசுகிறார், பேச்சில் தெளிவில்லை, தானாகவே சிரிக்கிறார், தானாக அழுகிறார், தள்ளாடி நடக்கிறார் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்தின் இந்த செயல்பாடுகள், நிச்சயம் வாக்காளர்களுக்கு அவர் மீது உள்ள மரியாதை மற்றும் நம்பிக்கையை குறைத்து, அவருக்கு கிடைக்கும் ஓட்டுகளை குறைக்க வாய்ப்புள்ளது. தற்போது விஜயகாந்துடன் கூட்டணி வைத்துள்ள, மக்கள் நலக் கூட்டணியினரும் இதுபற்றி யோசிக்காமல் இல்லை. இறுதியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

அதாவது, விஜயகாந்த் இனி பிரச்சாரங்களில் அதிகம் பேசமாட்டர். ஒன்று இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசுவார். மற்ற அனைத்தையும் மக்கள் நலக் கூட்டணியினர் மற்றும் பிரேமலதா ஆகியோர் பார்த்துக் கொள்வார்கள்.

விஜயகாந்தை மக்களிடம் காட்டியே அவர்களின் ஒட்டுகளை பெற அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதனால், இனிமேல், பிரேமலதாவே மேடைகளில் அதிகம் பேசுவார் என்று தெரிகிறது.

No comments :

Post a Comment