விஜயகாந்த், பிரேமலதா சொல்வது பொய் : யுவராஜ் பேட்டி

Share this :
No comments


திமுகவுடன் கூட்டணி சேர்வது தொடர்பாக, முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் பேரனுமான தயாநிதி மாறன், விஜயகாந்தை சந்தித்து பேசியது உண்மை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


விஜயகாந்த் எந்த கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் காலாநிதிமாறன் விஜயகாந்தை சந்தித்து கூட்டணி பற்றி பேசியதாகவும் தகவல் வெளியானது. மேலும், தேமுதிகவுக்கு 63 தொகுதிகள் கொடுக்க முன் வந்த நிலையில், விஜயகாந்த தன்னுடைய ராசி எண்ணான 5 வர வேண்டும் என்பதற்காக, 59 தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெற்றார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், விஜயகாந்த் திடீரென மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். அதனால் அதுவரை திமுகவுடன் கூட்டணி வைப்பதாக வெளிவந்த எல்ல செய்திகளும் வதந்தியாகவே இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால்,அதில் உண்மை உண்டு என்று, முன்னாள் தேமுதிக வட சென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் கூறியுள்ளார். இவர் சமீபத்தில் தேமுதிகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தவர்.

யுவராஜ் விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர். அவரின் வீட்டிற்கு அடிக்கடி செல்லும் அளவுக்கு செல்வாக்குடன் வலம் வந்தவர். எனவே விஜயகாந்தின் நடவடிக்கைகள் பற்றி நன்கு அறிந்தவர். அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியளித்த போது கூறியதாவது:

“விஜயகாந்த் தனித்துப் போட்டி என்று அறிவிப்பதற்கு முன், அவருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் சந்திப்பு நடந்தது. அதனால் திமுகவுடன் கூட்டணி ஏற்படும் என்று நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் விஜயகாந்த் திடீரென மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நிர்வாகிகள் பலர் அழுதே விட்டனர்” என்று கூறினார்.

விஜயாகாந்தை கலாநிதி மாறன் சந்தித்தார் என்று கூறப்பட்ட நிலையில், தயாநிதி மாறன்தான் சந்தித்தார் என்று யுவராஜ் கூறியுள்ளார்.

திமுக தரப்பிலிருந்து அழைப்பு விடுத்தது உண்மை. ஆனால், கூட்டணி பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் கூறி வரும் நிலையில், யுவராஜ் இப்படி கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments :

Post a Comment