புல் மப்புல இருந்த அதிமுக பெண் எம்.பி: வாட்ஸ் ஆப்பில் பரவும் ஆடியோ பேச்சு

Share this :
No comments


அதிமுக பெண் எம்.பி சசிகலா புஷ்பா தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்தவர். இவர் மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வாலிபர் ஒருவருடன் பேசுவது போல் ஆடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் சசிகலா புஷ்பாவின் புகைப்படத்துடன் அவர் வாலிபர் ஒருவருடன் பேசுவது போல் வருகிறது. அதில், நேற்று ஏன் போனை கட் பின்னிட்ட என அந்த வாலிபர் கேட்க்கிறார். அதற்கு பதில் அளித்த அந்த பெண் குரல், நேற்று நான் புல் மப்புல இருந்தேன், நண்பர் ஒருவருடன் சரக்கடிச்சு புல் மப்பாயிட்டேன், உன் ஞாபகம் வந்தது போன் பண்னேன், பிறகு ஏதாவது உலறிடுவேன் என்று போனை கட் பண்ணிட்டேன் என்றார்.

மேலும் கலெக்டர் ரவிகுமார், அமைச்சர் யாருக்கும் அறிவே இல்லை. எல்லாரும் டம்மி எனவும் பேசி இருக்கிறார் அவர். அதிமுக பெண் எம்.பி சசிகலா புஷ்பா பேசியதாக வரும் இந்த வாட்ஸ் ஆப் பேச்சு குறித்து உறுதிபடுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாக வில்லை.

அதிமுக மகளிர் அணி செயலாளராக இருந்த சசிகலா புஷ்பாவை கடந்த ஜனவரி மாதம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அந்த பொறுப்பிலிருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment